ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒனறான, இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான புரோ கபடி சீசன் - 9 தொடங்குவதற்கான சிக்னல் கிடைத்துவிட்டது.
VIVO PRO KABADDI SEASON - 9 வீரர்களுக்கான ஏலம் வரும் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 /08/2022 (இரண்டு நாட்கள்) மும்பையில் நடைபெறுகிறது.
image credit: pro kabaddi web |
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தரத்திற்கு ஏற்ப வீரர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் புதிய இளம் வீரர்கள் (NYPs) என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுவார்கள்.
வீரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் ‘ஆல்-ரவுண்டர்கள்’, ‘டிஃபெண்டர்கள்’ மற்றும் ‘ரைடர்கள்’ எனப் பிரிக்கப்படுவார்கள்.ஒவ்வொரு அணியின் உரிமையாளருக்கும் 4.4 கோடி வரை வீரரை தேர்ந்தெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Category A – INR 30 Lakhs, அடிப்படை விலை.
Category B – INR 20 Lakhs, அடிப்படை விலை.
Category C – INR 10 Lakhs, அடிப்படை விலை.
Category D – INR 6 Lakhs.அடிப்படை விலை.
500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இதில் இந்த ஆண்டு நடைபெற்ற Khelo India University Games 2021 வெற்றி பெற்ற Winner, Runner அணிகளிலிருந்து 24 வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
Pro Kabaddi season 8, தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களை எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பிரிவின் கீழ் 6 வீரர்களையும், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் 4 புதிய இளம் வீரர்கள் (NYPs) வரையிலும், உரிமையாளர்கள் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
Pro Kabaddi சீசன்-9க்காண ஏலம் மற்றும் தகுதியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்களின் விவரங்கள்;
பெங்கால் வாரியர்ஸ்
- பாலாஜி.D
- சக்திவேல்.R
- குகன் .R
குஜராத் ஜாயின்ட்
- சந்திரன் ரஞ்சித்
- வினோத் குமார் (பாண்டிச்சேரி)
ஹரியானா ஸ்டீலர்ஸ்
- பிரபஞ்சன்.K
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
- அஜித் குமார்.V
பாட்னா பைரட்ஸ்
- அப்துல் இன்சமாம்.S
- சஜன் சந்திரசேகர்
- தியாகராஜன் யுவராஜ்
புனேரிபல்டன்
- அபினேஷ் நடராஜன்
தமிழ் தலைவாஸ்
- அபிமன்யு .K
- விஸ்வநாத்.V
- அபினேஷ்.M
யுபியுட்டா
- பாபு முருகேசன்
Pro Kabaddi starting date;
இதற்கான போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Pro Kabaddi season 9 Players auction | Pro Kabaddi season 9 | Pro Kabaddi News
0 Comments