தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தென்காசி மாவட்டம் கபடி கழகம் இணைந்து நடத்தும் 69-வது மாநில சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி,தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 18/3/2022 முதல் 20/3/2022 முடிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் தமிழகத்தின் 38 மாவட்டங்களை சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிக்கு தமிழகத்தின் சார்பாக விளையாட அனுப்பப்படுவார்கள்,கபடி வீரர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி இருப்பதால் கபடி வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
38 மாவட்ட அணிகளின் POOL விவரங்கள்;
Pool-A
1.மயிலாடுதுறை
2.விழுப்புரம்
3.கள்ளக்குறிச்சி
Pool-B
1.செங்கல்பட்டு
2.அரியலூர்
3.வேலூர்
Pool-C
1.சென்னை
2.நாமக்கல்
3.சேலம்
Pool-D
1.தூத்துக்குடி
2.தேனி
3.நீலகிரி
Pool-E
1.தர்மபுரி
2.திண்டுக்கல்
3.திருவள்ளூர்
Pool-F
1.திருவண்ணாமலை
2.ராம்நாடு
3.ஈரோடு
Pool-G
1.புதுக்கோட்டை
2.பெரம்பலூர்
3.திருநெல்வேலி
Pool-H
1.நாகை
2.திருவாரூர்
3.தென்காசி
Pool-I
1.விருதுநகர்
2.தஞ்சாவூர்
3.கரூர்
Pool-J
1.காஞ்சிபுரம்
2.கோயம்புத்தூர்
3.ராணிப்பேட்டை
Pool-K
1.சிவகங்கை
2.மதுரை
3.கன்னியாகுமரி
4.திருப்பத்தூர்
Pool-L
1.திருப்பூர்
2.கடலூர்
3.திருச்சி
4.கிருஷ்ணகிரி
லீக் சுற்று முடிந்து கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் விவரங்கள்;
முதல் காலிறுதி ஆட்டம்
ராமநாதபுரம் ( 23 ) - கன்னியாகுமரி ( 42 )
கன்னியாகுமரி வெற்றி
இரண்டாம் காலிறுதி ஆட்டம்
விழுப்புரம் ( 37 ) - திருவள்ளூர் ( 35 )
விழுப்புரம் வெற்றி
மூன்றாம் காலிறுதி ஆட்டம்
தூத்துக்குடி - தென்காசி
தூத்துக்குடி வெற்றி
நான்காம் காலிறுதி ஆட்டம்
ஈரோடு - செங்கல்பட்டு
ஈரோடு வெற்றி
மாலை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ள அணிகள்;
முதல் அரையிறுதிப் போட்டி
கன்னியாகுமரி மாவட்டம் Vsவிழுப்புரம் மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வெற்றி
இரண்டாம் அரையிறுதிப் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் Vs ஈரோடு மாவட்டம்.
ஈரோடு மாவட்டம் வெற்றி
69-ஆவது சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாட ஈரோடு மாவட்ட அணியும் கன்னியாகுமரி மாவட்ட அணி தகுதி பெற்றுள்ளது.
0 Comments