இந்த ஆண்டு 2021-2022 நடைபெறும் தேசிய சாம்பியன்ஷீப் கபடி போட்டிக்கான வீரர்களின் தேர்வுக்காக தமிழ்நாடு அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி அமேச்சூர் கபடி கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் 38 மாவட்டங்கள் பங்கேற்கும் இந்தப்போட்டி சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என்ற மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது.தமிழ்நாடு சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி;
- சீனியர் சாம்பியன்ஷிப் ஆண்கள்;
இந்தப் போட்டியானது தென்காசி மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இடம்: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், தென்காசி மாவட்டம்.
நாள்:18/03/2022 முதல் 20/03/2022 வரை (வெள்ளி, சனி ,ஞாயிறு)
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் அறிவிப்பு படி கொரனா பரவல் காரணமாக இந்தப் போட்டியானது ஒத்திவைக்கப்படுகிறது.தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்.
- சீனியர் சாம்பியன்ஷிப் பெண்கள்;
இந்தப் போட்டியானது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும்.
தமிழ்நாடு சீனியர் கேர்ள்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக செயலாளர் திரு சபியுல்லா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வரும் டிசம்பர் மாதம்-31 தேதி தொடங்கி ஜனவரி-2 தேதி வரை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
Sports Stadium Tiruvannamalai |
- ஜூனியர் ஆண்கள்;
இந்தப் போட்டியானது புதியதாக உதயமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும்.
[நடைபெறும் இடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்]
- ஜூனியர் பெண்கள்;
இந்தப் போட்டியானது மதுரை மாவட்டத்தில் நடைபெறும்.
[நடைபெறும் இடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்]
💥சப்-ஜூனியர் பாய்ஸ்
இந்தப் போட்டியானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும்
💥சப்-ஜூனியர் கேர்ள்ஸ்
இந்தப் போட்டியானது திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும்.
💥தேசிய அளவிலான போட்டிக்கு நாட்கள் குறைவாக உள்ளதாலும்,தொடர் மழையின் காரணமாகவும், தமிழக சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு, போருக்கு(selection trials) தேர்வு முறையில் நடைபெறும்.
Sub-Junior Kabaddi court measurement click here
Tag: TN KABADDI | Tamil Nadu Championship competition-2021 | தமிழ்நாடு சாம்பியன்ஷிப் போட்டி | Tamil Nadu State Kabaddi Championship venues 2021
0 Comments