Pro Kabaddi player auction rules 2021

புரோ கபடி சீசன்-8, வீரர்கள் ஏலத்திற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.12 புரோ கபடி உரிமையாளர்கள் தங்கள் அணியில் இருந்த 161 வீரர்களை விடுவித்து,59 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

Pro Kabaddi player auction rules 2021
Image credit Pro Kabaddi


ஒரு அணியில் அதிகபட்ச அணி வீரர்களின் அளவு என்ன?

ஒவ்வொரு புரோ கபடி அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சம் 25 வீரர்களும் இருக்க வேண்டும்.இதன் பொருள் இந்த வருட புரோ கபடி போட்டியில் 12 அணிகளில் அதிகபட்சமாக 300 வீரர்கள் பங்கேற்கலாம்.

விவோ புரோ கபடி 2021 ஏலத்தில் 450 க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்,இந்த ஏலத்தில் உள்நாட்டு கபடி வீரர்கள், வெளிநாட்டு கபடி வீரர்கள் மற்றும் புரோ கபடி சீசன் 6 மற்றும் ஏழில் பங்கேற்ற வீரர்கள், சீனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் 8 இடங்களை பிடித்த அணிகளின் வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கிறார்கள்.

 புரோ கபடி ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் எவ்வளவு செலவு செய்ய முடியும்?

வீரர்களை வாங்குவதற்காக அணிகள் மொத்தம் 4.4 கோடி ரூபாய் தொகையை கொண்டுள்ளன.இந்த சீசனுக்கான ஒரு வீரரின் சம்பளம்  மீது வைக்கப்படும் அதிகபட்ச ஏலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது இரண்டு வெளிநாட்டு வீரர்கள், A,B,C,D  வகைப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு வீரர்கள் மற்றும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் வீரர்கள் என்று  இந்த தொகையை தங்கள் அணிக்கான கபடி வீரர்களை தேர்ந்தெடுக்க, புரோ கபடி அணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

A-பிரிவு வீரர்களுக்கு 30 லட்சம் 

B-பிரிவு வீரர்களுக்கு 20 லட்சம் 

C-பிரிவு வீரர்களுக்கு 10 லட்சம் 

D-பிரிவு வீரர்களுக்கு 6 லட்சம்  என்று குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

புதிய இளம் வீரர்கள் யார்?

மஷால் ஸ்போர்ட்ஸின் வருங்கால கபடி ஹீரோஸ் ஸ்கவுட்டிங் திட்டத்தின் மூலம் வரும் அணியற்ற வீரர்கள் ஏலத்தில் புதிய இளம் வீரர் அல்லது NYP (New Young Players) பிரிவின் கீழ் வருகிறார்கள்.சீனியர் நேஷனல் கபடி போட்டிகளில் தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள்.

Pro Kabaddi player auction rules 2021
Image credit Pro Kabaddi

இளம் வீரர்களின் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக கூடும்.

இறுதி ஏலம் போட்டி (FBM) என்றால் என்ன?

தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரரின் அதிகபட்ச ஏல தொகைக்கு மற்றொரு அணி எடுத்தபிறகு,மற்றொரு வாய்ப்பு அந்த வீரரின் முந்தைய அணிக்கு வழங்கப்படும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக அஜித் குமார் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் கலந்து கொள்கிறார், ஏலத்தில் அவரை தெலுங்கு டைட்டன் அதிகபட்ச தொகைக்கு எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த தொகைக்கு ஈடாக தமிழ் தலைவாஸ் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அஜித்குமாரை மீண்டும் தமிழ் தலைவாஸ் அணிக்கு விளையாட வைக்க முடியும்,இது அந்த அணியின் உரிமையாளரின் முடிவைப் பொருத்தது.

FBM கார்டை ஒவ்வொரு அணியும் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், இந்த எண்ணிக்கை அவர்களின் முந்தைய தக்கவைப்பின்(retain)  எண்ணிக்கையைப் பொறுத்தது. ஒரு அணி தங்களுக்கு அதிகபட்சமாக ஒதுக்கப்பட்ட 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளத் தேர்வுசெய்தால், அவர்கள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த முடியாது. அவர்கள் ஐந்து பேரைத் தக்கவைத்துக் கொண்டால் அவர்கள் இந்த விருப்பத்தை ஒரு முறை பயன்படுத்தலாம் மற்றும் எண் ஐந்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் அதை இரண்டு முறை பயன்படுத்தலாம்.

இதுவரை நடந்த புரோ கபடியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களை பற்றி ஒரு பார்வை;

  • மோனு கோயட் - Rs 1.51 crore - Haryana Steelers, Season 6
  • சித்தார்த் தேசாய் - Rs 1.45 crore - Telugu Titans, Season 7
  • ராகுல் சவுதாரி- Rs 1.29 crore - Telugu Titans, Season 6
  • நிதின் தோமர் - Rs 1.20 crore - Puneri Paltan, Season 7
  • தீபக் ஹூடா  - Rs 1.15 crore - Jaipur Pink Panthers, Season 6
  • நிதின் தோமர் - Rs 1.15 crore - Puneri Paltan, Season 6
  • ரிஷாங்க் தேவாதிகா - Rs 1.11 crore - UP Yoddha, Season 6
  • ஃபேசல் அட்ராசலி - Rs 1 crore - U Mumba, Season 6
Pro Kabaddi player auction rules 2021
Image credit Pro Kabaddi

Tags: Pro Kabaddi Players | Pro Kabaddi Auction |
pro kabaddi 2021 auction |pro kabaddi auction | pkl auction |pro kabaddi league auction


விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ஒரே இடத்தில் உங்கள் பார்வைக்கு : https://www.sportshealth.in/

Post a Comment

0 Comments