புரோ கபடி 2021 கபடி களத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் தமிழக வீரர்கள் யார்? யார்?
Vivo Pro Kabaddi சீசன்-8 வெகு விரைவில் தொடங்க உள்ளது,வீரர்களுக்கான ஏலம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது.இதில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
சென்ற ஆண்டு புரோ கபடி நடக்காததால், புதிதாக சேர்க்கப்பட்ட ராம்குமார் TAMILNADU POLICE மற்றும் சாஜன் ICF CHENNAI, இவர்கள் இருவரும் இந்த ஆண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரோ கபடி லீக் தொடரில் உள்ள 12 அணிகளும் தலா 4.4 கோடி ரூபாய் வரை செலவு செய்து வீரர்களை தேர்வு செய்யலாம். உள்நாட்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தகுதிக்கு ஏற்ப 4வகையாக பிரிக்கப்பட்டு முறையே 30, 20, 10, 6 லட்ச ரூபாய் குறைந்தபட்ச ஏலத்தொகைகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஏலத்தில் பங்கேற்க சுமார் 500 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து எந்தெந்த வீரர்கள் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்களிடம் சமூகவலைதளங்களில் கேட்கப்பட்டது,பெரும்பாலான ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கபடி வீரரின் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
ரசிகர்களின் விருப்பமாக தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பெயர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பரிந்துரைத்த வீரர்களின் முழு விவரம்;
- பாரிவள்ளல், ராம்குமார் - கடலூர் மாவட்டம்
- M.கார்த்திக் கோபிசெட்டிபாளையம்
- முனியப்பன் SRM & POSTAL KABADDI PLAYER
- வரதராஜன் சேலம் INCOME TAX (கொள்ளு என்று அன்போடு அழைக்கப்படுபவர்)
- பிரவீன் தமிழ்நாடு காவல்துறை
- வியாசமுணி DB JAIN COLLEGE, CHENNAI
- வியாசமுணிபாண்டிச்சேரியை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழக கபடி ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளார்.
- மகாலிங்கம் சாமி பிரதர்ஸ் சேலம்
- சத்தியசீலன் VKR KABADDI TEAM
- மலையரசன் கஸ்டம்ஸ் கபடி அணி
- அப்துல் ICF KABADDI TEAM
- ஜெகன் இன்கம்டேக்ஸ் கபடி அணி
- தரமாக்கி ரஞ்சித்
- கிரி APM
- அபினேஷ் GFC moolachal
- தென்றல் கடலூர் மாவட்டம்
- ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் ரம்மி அவர்கள் புரோ கபடியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது தமிழக ரசிகர்களின் விருப்பம், ஆனால் அவர் உடல் எடையின் காரணமாக புரோ கபடியில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.
2 Comments