Tamilnadu kabaddi video live

 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பண்ணப்பட்டி கிராமம் பன்னாங்கொம்பு கபடி திருவிழா

இந்திய அளவில் புகழ்பெற்ற கபடி போட்டிகளில் பன்னாங்கொம்பு கபடி போட்டியும் ஒன்று. 

தமிழகத்தின் மிகச் சிறந்த அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.சென்னை தபால் துறை, துர்க்காம்பிகை திருநெல்வேலி, தமிழ்நாடு காவல்துறை கபடி அணி, மதுரை  கஷ்டம்ஸ் அணி, அளத்தங்கரை கபடி கிளப், ஈரோடு AMKC போன்ற பல முன்னணி அணிகள் இந்த போட்டியில் பங்கேற்று உள்ளன.

தென்னிந்தியாவின் தலைசிறந்த கபடி வீரர்கள் Pro Kabaddi சந்திரன் ரஞ்சித்,வினோத்,சுபாஷ்,முனிஷ்,சாந்தப்பன் செல்வம்,பிரதாப், ஈரோடு ரம்மி போன்ற பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பரிசு மழை பொழியும் இந்த கபடி போட்டியில் சிறந்த வீரர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் காப்பீடு வழங்கபடுகிறது.

கொரனா லாக்டவுனுக்கு பிறகு தபால் துறை கபடி தன்னுடைய அணியின் கோச் பெயரில்(ஜெயசீலன்)பங்கேற்றுள்ளது.

இந்த போட்டியின் தொடர் நாயகனுக்கு Hero Honda Bike பரிசாக காத்திருக்கிறது.

            Know in Basic Kabaddi rules of tamil click here: 

கபடி அழைப்பிதழில் இருக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

பண்ணப்பட்டி கிராமம் பன்னாங்கொம்பு கபடி திருவிழாவின் பரிசு விவரங்கள்:-

ஜெயசீலன் சென்னை கபடி அணி முதல் இடத்தை பெற்றது,

இரண்டாம் இடத்தை கனகு பிரதர் வெண்ணங்குளி பெற்றது,

மூன்றாம் இடத்தை முறையே துர்காம்பிகா திருநெல்வேலி அணியும் தமிழ்நாடு காவல்துறை அணியும் பகிர்ந்துகொண்டனர்.

TAG: Tamil nadu kabaddi video live | Tamilnadu kabaddi news | pannankombu kabaddi

Post a Comment

0 Comments