Tamilnadu Kabaddi players selected in Indian Kabaddi team

Tamilnadu Kabaddi players selected in Indian Kabaddi team(camp)

எதிர்வரும் கபடி போட்டிகளில், இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ளும் கபடி அணியின் வீரர் வீராங்கனைகள்,பயிற்சிக்காக(camp) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்,

தமிழகத்தின் சார்பாக 3 கபடி வீரர்கள் மற்றும் மூன்று கபடி வீராங்கனைகள்இந்த பயிற்சியில் கலந்து கொள்கிறார்கள்,அவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

V.அஜித் குமார்;

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார்,தமிழக அணிக்காக Junior national,khelo india, மற்றும் Pro Kabaddi Season-7யில் தமிழ்தலைவாஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார்.
இந்த வருட 67th Senior National கபடி போட்டியில் தமிழக அணி சார்பாக பங்கேற்றார்,மூன்று போட்டிகளில் 19 புள்ளிகளை எடுத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்....!
இந்திய உத்தேச அணிக்கு ரைடராக(Rider)தேர்தெடுக்கபட்டுள்ளார்.

Tamilnadu-Kabaddi-players


தமிழ் தலைவாஸ் நட்சத்திர வீரர் அஜித் குமார் வாழ்க்கை விவரங்கள் முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்

M.அபிஷேக் மனோகரன்;

கன்னியகுமாரி மாவட்டம் அளத்தங்கரை கபடி கிளப்யில் பயிற்சி பெறும் அபிஷேக் (Defender), Pro Kabaddi season-7யில் தமிழ் தலைவாஸ் அணிக்கா விளையாடினார்,67th senior national kabaddi போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்றார்,21 டேக்கல் செய்து 18 புள்ளிகளை பெற்று அசத்தினார்!...
இந்திய உத்தேச அணிக்கு Right Cover defandetராக தேர்தெடுக்கபட்டுள்ளார்.
Tamilnadu-Kabaddi-players


E.சுபாஸ்;(STAND BY)

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர், சாமியப்பா கிளப்யில் பயிற்சி பெற்றவர்,
Pro kabaddi session-5,6யில் U Mumba அணிக்காக விளையாடினார் 
Session-7யில் Jaipur pink panthers அணிக்காக விளையாடினார்,
67th Senior National Kabaddi போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று 18 டேக்கலில் 10 புள்ளிகளை எடுத்து சிறப்பான விளையாட்டை வெளிபடுத்தினார்.
இந்திய உத்தேச அணியில் Right Corner Defenderராக இடம் பெற்றுள்ளார்.
Tamilnadu-Kabaddi-players



வினோத் குமார்;

பாண்டிச்சேரியை சேர்ந்த வினோத் குமார்Pro Kabaddiயில் U Mumba,தெலுங்கு டைட்டன்,Bengalore bulls போன்ற அணிகளுக்கு விளையாடியுள்ளார்,
67th Senior National கபடி போட்டியில் 44 ரைடில் 25 புள்ளிகளை பெற்று பாண்டிச்சேரிக்கு பெருமை சேர்த்தார்.
இந்திய உத்தேச அணியில் ரைடராக(rider) தேர்வு செய்யபட்டுள்ளார்.



இந்தியா முழுவதும் மொத்தம் 37 கபடி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், நான்கு குழுவாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது,தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ள குழுவிற்கு Mr. E.பாஸ்கரன் அவர்கள் பயிற்சியாளராக இடம்பெற்றுள்ளார்.


இந்திய மகளிர் உத்தேச அணியில் மூன்று வீரங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள்,அவர்களின் விவரம் பின்வருமாறு:-

R.சத்யபிரியா;

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்,கபடியின் மூலம் தென்மத்திய ரயில்வேயில் பணியாற்றும் சத்யபிரியா அவர்கள் 67th senior National Kabaddi போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று 46 ரைடில் 20 புள்ளிகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
இந்திய பெண்கள் உத்தேச அணியில் ரைடராக(Rider) இடம்பெற்றுள்ளார்.
Tamilnadu-Kabaddi-players



மோகனா(STANDBY)

சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரனை,67th Senior National கபடி போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று,தமிழக அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார்.
இந்திய உத்தேச அணியில் ரைடராக(rider) தேர்வு செய்யபட்டுள்ளார்.
Tamilnadu-Kabaddi-players


Mohana Biodata;
மோகனாவின் அப்பா பெயர் ராஜா, அம்மா பெயர் பூங்கொடி,  
 சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகில் உள்ள காவேரிபுரம் அரசுபள்ளியில் பயின்ற போது குமிலியத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் திரு.திருஞாணத்தால் பட்டை தீட்டபட்டவர் மோகனா, 
எல்லம்மா,புனிதா, சுகன்யா, மோகனா அனைவருமே தமிழக கபாடி வீராங்கனைகள், மோகனா தற்பொழுது ரயில்வே கபாடி அணியில் விளையாடிவருகிறார்.
(மோகனாவின் கபடி அணி பற்றிய கட்டுரை விரைவில்)

I.பவித்ரா;

தென்மத்திய ரயில்வேயில் பணியாற்றும் பவித்ரா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்,ஆசிய கபடி போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றவர்,
67th Senior National Kabaddi போட்டியில் "இந்தியன் ரயில்வே" அணியில் பங்கேற்றார்.
இந்திய உத்தேச அணியில் Defenderராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
Tamilnadu-Kabaddi-players


பவித்ரா பற்றிய சிறுகுறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு இவரின் சொந்த ஊர்,இவர் இந்திய பெண்கள் அணியில் இடம்பிடித்ததுடன்,ஈரானில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்.

ரயில்வே அணி வீராங்கனை பவித்ரா அவர்களுக்கு Mr.சுனில் தபாஸ் அவர்களும் தமிழக வீராங்கனை சத்தியபிரியா அவர்களுக்கு Mr.ரம்பீர் சிங் கோகர் அவர்களும் பயிற்சியாளராக  இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா முழுவதும் 36 கபடி வீராங்கனைகள் உத்தேச கபடி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,இந்தப் பயிற்சி கேம்பிலிருந்து தேர்வாகும் வீரர்-வீராங்கனைகள் இந்திய கபடி அணிக்காக விளையாடுவார்கள்.

67th Senior National kabaddi Video Between Tamilnadu vs uttar pradesh





TAG: Tamilnadu kabaddi, kabaddi tamilnadu, Indian kabaddi Team,Indian Camp team, 67th senior national probable players, indian team selection

Post a Comment

1 Comments

Unknown said…
இந்த வருஷம் சீனியர் நேஷனல் போட்டியில் என்ன ராம்குமார் எந்த வகையில் தகுதியற்றவர்