கபடி வீரர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள்,சலுகைகளும்
கபடி வீரர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் தான்,கபடியின் வளர்ச்சி இருக்கும்,கபடி வீரர்களுக்கு கிடைக்கும் அரசாங்க சலுகைகள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
Pro Kabaddi;
ஆம் Monu Goyat அவர்களை Haryana Steelers 1.51கோடிக்கு(Season-6) ஏலத்தில் எடுத்தது, Siddharth Desai அவர்களை 1.45 கோடிக்கும், Nitin Tomar அவர்களை 1.20 கோடிக்கும்,Rahul Chaudhari அவர்களை 95 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்தது Pro Kabaddi அணிகள்.
இந்த பணமதிப்பு ஒரு சீசனுக்கு(3-6 மாதங்கள்) கொடுக்கபடும் தொகையாகும்,Pro Kabaddiக்கு ஒரு வீரர் தேர்வு பெற்றலே போதும் குறைந்தபட்சம் "6 இலட்சம்" ஊதியமாக வழங்கபடுகிறது.
ஒவ்வொரு கபடி வீரனின் இலட்சியம் இந்திய கபடி அணியில் விளையாட வேண்டும் என்பது,அது போலவே இன்று Pro kabaddiயிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பது கபடி வீரர்களின் கனவாக உள்ளது.
புரோ கபடி வீரர்களுக்கு நன்மதிப்பையும், கூடவே வாழ்க்கைக்கு தேவையான பணத்தையும் கொடுக்கிறது.
ஒரு கபடி வீரர் புரோ கபடியில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றிய கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்
கபடி வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசு நிறுவனங்கள்:-
கபடி வீரர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகள் "இந்திய ராணுவமும்,இந்திய ரயில்வேயும்
மேலும்"தமிழக விளையாட்டு வீரர்கள் தங்களின் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசுப் பணி வங்கிகள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), இந்திய உணவுக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை நம்பியுள்ளனர்.
தபால் துறையிலும் கூட கபடி வீரர்களுக்கு படிப்பு தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பை வழங்குகின்றன.
எடுத்துக்காட்டாக ரயில்வே துறையில் சேரலாதன் அண்ணா அவர்களும் தபால் துறையில் சந்திரன் ரஞ்சித் அவர்களும், வங்கித் துறையில் புகழ்பெற்ற கபடி வீரர் ஜீவா குமார் அவர்களும் உள்ளார்கள்,ரயில்வே துறையில் தமிழக வீராங்கனைகள் பவித்ரா அவர்களும் சத்யபிரியா அவர்களும் உள்ளார்கள்.கஸ்டம்ஸ் துறையில் தமிழக வீரர் சேலம் சுபாஷ் அவர்களும்,இன்கம்டாக்ஸ் துறையில் தம்மம்பட்டி கபடி வீரர் வரதராஜன் அவர்களும் உள்ளார்கள்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பும் சலுகைகளும்;
தமிழக அரசு வேலைவாய்ப்பில் "மூன்று சதவிதம்" விளையாட்டு வீரர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கபடுகிறது.
தமிழக அரசுப் பணிகளில் காவல் துறையைத் தவிர வேறு எந்த துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு அதிக இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. காவல் துறையிலும் 5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்படுகிறது., தமிழக மின்சார வாரியம்,வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையும் சொற்ப எண்ணிக்கையில் கபடி வீரர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.
(மற்ற துறைகளும் இட ஓதுக்கீடுக்கு தகுந்தார் போல் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது)
எடுத்துக்காட்டாக சமீபத்தில் காவல் துறையில் ராம் அவர்களும்,வனத்துறையில் தூத்துக்குடி சுப்பிரமணி அவர்களும் கரூர் ராதாகிருஷ்ணன் அவர்களும் வேலைவாய்ப்பை பெற்றனர்.
பல்வேறு கபடி வீரர்கள், "அரசு பணியில்" வேலை வாய்ப்பு பெறுகிறார்கள், ஒருசிலரை எடுத்துக்காட்டுகாக கூறப்பட்டுள்ளது
விளையாட்டு வீரர்களை ஊக்கபடுத்தும் நோக்கத்தில் தமிழக அரசால் வருடந்தோரும் "முதலமைச்சர் கோப்பை" என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தபடுகின்றன,20 வகையான விளையாட்டுகளில் கபடியும் ஒன்று.
கபடியில் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு 12 இலட்சம்(ஒரு நபருக்கு ஒரு இலட்சம் வீதம் 12 நபர்களுக்கு) வழங்கபடுகிறது.
இரண்டாவது பரிசு பெறும் வீரர்களுக்கு தலா 75,000 ரூபாய் விதமும், மூன்றும் பரிசு வெல்பவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கபடுகிறது.
மத்திய,மாநில அரசு விளையாட்டு பயிற்சியுடன் தங்கும் விடுதியையும் ஏற்படுத்துகொடுக்கின்றன!
மாணவர்களின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுகொள்கிறது.
முழு விவரங்களுக்கு மத்திய அரசின் SAI- https://sportsauthorityofindia.nic.in/ இணையதளத்தையும்,மாநில அரசின் SDAT- https://www.sdat.tn.gov.in/இணையதளத்தையும் பார்வையிடவும்.
ஹரியாணாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் உள்ளது. காவல் துறை மட்டுமின்றி, அரசுத் துறை, பல்வேறு வாரியங்கள், மாநகராட்சி போன்றவற்றிலும் விளையாட்டு வீரர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் பட்சத்தில் அவர்கள் நேரடியாக துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்படுகிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றாலே ஹரியாணாவில் அரசு வேலை வழங்கப்படுகிறது. அதனால்தான் ஹரியாணா வீரர்கள் ஒலிம்பிக்கிலும், சர்வதேசப் போட்டிகளிலும் ஜொலிக்கிறார்கள். பதக்கத்தைக் குவிக்கிறார்கள்.
அதேபோன்ற சூழலை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். தமிழக வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும்போது, அவர்கள் வென்ற பதக்கங்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுமானால், தமிழகம் வலுவான விளையாட்டு அணிகளைப் பெறும். இதனால் ஏராளமானோர் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பார்கள். சர்வதேசப் போட்டிகளிலும் தமிழகம் கோலோச்சும் சூழல் ஏற்படும்.
TAG: How can I get a job in kabaddi? What is the age limit for kabaddi? கபடி வீரர்களுக்குவேலைவாய்ப்பு | Kabaddi players, kabaddi job | Employment for Kabaddi players | Reservation for athletes.
0 Comments