புதிய மாவட்டத்திற்கான கபடி கழக நிர்வாகிகள் தேர்வு
சமீபத்தில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,அதையடுத்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை பிரித்து திருப்பத்துார் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர்,ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டதால் வேலூர் மாவட்ட கபடி கழகத்தில் நிர்வாகிகள் தேர்வு 07/11/2020 குடியாத்தம் சீவூர் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கபடி கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை தமிழ்நாடு கபடி கழக நடுவர் குழுவி கன்வீனரும், தேசிய நடுவர் குழு உறுப்பினருமான
திரு.கோபாலன் அவர்கள் அறிவித்தார்.
நிர்வாகிகள் பட்டியல்;
திரு சேவூர் சேட்டு கௌரவத் தலைவர்,
திரு.பூஞ்சோலை சீனிவாசன் தலைவர்,
திரு.கோபாலன் செயலாளர்,
திரு.அம்மன் ரவி பொருளாளர்,
மற்றும் துணை தலைவர்கள், இணைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய வேலூர் மாவட்ட கபடி கழக தலைவர் சீனிவாசன் அவர்கள் வீரர்களின் குறைகளை களைந்து வீரர்களுக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றபடும் என்று வாக்குறுதி அளித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திரு.மதன்குமார் PK Sports Club Founder திரு.ஜெயகாந்தன் Tamilnadu Kabaddi Team Manager திரு.குமார் Krishnagiri Kabaddi Association President ஆகியோர் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதம் புதியதான உருவான 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் என்று கபடி கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கபடி கழக மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் விவரங்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
TAG: Tamilnadu Kabaddi Association | Vellore district Kabaddi Association Choose executives, Tamil Nadu new district | வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் | GK SPORTS KABADDI WEBSITE
0 Comments