Basic knowledge of Kabaddi rules in Tamil
கபடி பற்றிய பொதுவான விதிமுறைகள்,புதியதாக கபடி போட்டிகளை பார்ப்பவர்களும் எளிதாக கண்டு ரசிக்கும் வகையில் போட்டியின் விதிமுறைகள் தொகுக்கபட்டுள்ளது.
Kabaddi;
இது ஒரு குழு விளையாட்டு,ஒரு போட்டியில் இரண்டு குழுக்கள் இடம்பெறும்,ஒரு குழுவிற்கு 12 பேர் விதம் 24 பேர்கள் இடம்பெறுவார்கள்,இதில் ஒரு குழுவிற்கு 7 பேர் வீதம்(Main 7) களத்தில் இடம்பிடிப்பார்கள், மீதம் 5 பேர் காத்திருப்பு வீரராக(substitute Player)இடம்பெறுவார்கள்.
போட்டியானது செயற்கை ஆடுகளம்(Mat) அல்லது மண் மற்றும் மரதூளலால் உருவாக்கபட்ட இயற்கை ஆடுகளத்திலும் நடைபெறும்.
கபடி மைதானத்தின் அளவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
போட்டியினாது 20- 5- 20 என்ற நேர அளவுகளில் நடத்தபடும்,போட்டி தொடங்கிய பிறகு உத்தியை உருவாக்க கபடி அணிகள் நடுவரிடம் Timeout கோரலாம்( 30 நொடிகள்)முதல் பாதியில் இரண்டு,இரண்டாம் பாதியில் இரண்டு என்ற வீதத்தில் மொத்தம் நான்கு Time Out ஒரு அணிக்கு கிடைக்கும்(Time Out காலம் போட்டியின் நேரத்தில் சேராது,வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு யாதவது அசௌகரியம் ஏற்பட்டலோ நடுவர்கள் Official Time Out கொடுப்பார்கள்)
TOSS;
போட்டியின் தொடக்கத்தை நிர்ணாயிக்க Toss போட படும்,Tossயில் வெல்லும் அணி தங்களின் விருப்பமாக ரைடையோ அல்லது சைடையோ தேர்வு செய்யலாம்.
எதிரணியின் களத்திற்கு" கபடி கபடி "என்று பாடி செல்பவர் ரைடர்(Rider) என்றும், தன் களத்தின் எல்லைக்குள் வரும் வீரரை பிடிப்பவர் டிபாண்டர்(Defender) என்றும் அழைக்கபடுவார்கள்.
ஒரு ரைடுக்கான(Ride)நேர அளவு 30 நொடிகள்.
Points;
கபடி போட்டியில் அதிகமான புள்ளிகள்(Points) பாடி தொடும் ரைடர்(Offence) மூலமும், பாடி வரும் வீரரை பிடிப்பதன்(Defence)மூலமும் பெறபடுகிறது.
Officials;
ஒரு போட்டிக்கு 5 நடுவர்கள் செயல்படுவார்கள்,மைதனாத்திற்கு நடுவில் இருபுறமும் இரு நடுவர்கள் (Main Upier),மைதானத்தின் இருபுறமும் எல்லை பகுதியில்(End Line) இருவரும்Scoreer,மைதானத்தை சுற்றி வந்து ஒருவர் வீதம்(Referee) ஐந்து பேர் போட்டியை கண்காணிப்பார்கள்.
(Pro Kabaddi போன்ற பெரிய போட்டியில் 3-வது நடுவர் TV-Official செயல்படுவார்)
Third Ride;
ஒரு அணி தொடர்ந்து இரண்டு முறை ரைடில் புள்ளிகளை பெறாமல் திரும்பினால் அடுத்து செல்லும் ரைட் Third Ride எனப்படும்,இந்த ரைடில் ரைடர் புள்ளிகளை பெற்ற ஆக வேண்டும்,புள்ளிகளை பெற முடியாவிட்டால் எதிரணிக்கு ஒரு புள்ளி செல்லும், ரைடரும் ஆவுட் என்ற முறையில் களத்திலிருந்து வெளியேறுவார்.
Bonus;
எதிரணியின் களத்தில் ஏழு அல்லது ஆறு வீரர்கள் இருக்கும்போது கபடி பாடி செல்லும் ரைடர் Bonus lineனை தாண்டி தன் கால் தடத்தை பதித்தால் ஒரு வெகுமதி புள்ளி(Bonus) கிடைக்கும்.
Super Tackle;
மூன்று நபர் அல்லது அதற்கும் குறைவான பிடி வீரர்கள் இருந்து பாடி செல்லும் வீரரை மடக்கி பிடித்தால், பிடிக்கும் அணிக்கு இரண்டு புள்ளிகள் (Super Tackle)கிடைக்கும்.
குறிபிட்ட நேரத்திற்குள் அதிகமான புள்ளிகளை பெற்ற அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
Kabaddi Rules Video Click Here
Tie Break;
போட்டி முடிவின்போது இரு அணிகளும் சம புள்ளியில் இருந்தால் போட்டியானது வெற்றி தோல்வியின்றி Tieயில் முடியும்,
லீக் போட்டி என்றால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும்.
Nnockout போட்டி என்றால் Tie break முறை பின்பற்றப்படும்,
இரு அணிகளுக்கும் சமமாக 5 ரைட் வாய்ப்பு அளிக்கபடும்,இதில் எந்த அணி அதிக புள்ளிகளை பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெறும்.
குறிப்பு: Tiebreakயில் Out ஆன Defender களத்திலிருந்து வெளியேறமாட்டார்கள்,7விளையாட்டு வீரருமே களத்தில் இருப்பர்கள்.
Golden Ride;
போட்டி நேர முடிவில் மற்றும் Tie breakயில் இரு அணிகளும் சம புள்ளிகள் பெற்றால் Golden Ride முறை பின்பற்றபடும்,
பூவா தலையாவில்(Toss)வெல்லும் அணி Offence அல்லது Defence தேர்வு செய்யும்,
இந்ந முறையில் ஒரே ஒரு ரைட் மட்டுமே அனுமதிக்கபடும், டச்(touch) நிகழ்ந்தால் ரைடர் அணி வெற்றிபெறும்.Rider Tackle செய்யபட்டால் Defence அணி வெற்றி பெறும்.
கோல்டன் ரைடிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால் எதிரணிக்கு கோல்டன் ரைட் வாய்ப்பு வழங்கப்படும்.
இரு ரைடுகளிலும் முடிவு தெரியாத பட்சத்தில் டாஸ் முறை பின்பற்றப்படும்.
To watch Kabaddi Videos on Our Channel click here
Tamil Nadu Kabaddi team image Click here
TAGS: Basic kabaddi | general knowledge of kabaddi |கபடி பற்றிய பொது அறிவு | Kabaddi knowledge | கபடி அறிவு,கபடி விதிகள் | Kabaddi rule | kabaddi rules tamil,கபடி விதிகளின் அடிப்படை அறிவு,கபடி விளையாட்டு தமிழ்,
10 Comments
நன்றி.