Who is the owner of Tamil thalaivas Kabaddi team

"தமிழ் தலைவாஸ்" கபடி அணியின் உரிமையாளர்கள் யார் ?

இந்தியாவில் தொழில் ரீதியாக நடத்தப்படும் விளையாட்டு போட்டி Pro Kabaddi League, இந்த போட்டியில் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன, அந்த 12 அணிகளில் ஒன்றான "தமிழ் தலைவாஸ்" சென்னையை மையமாக கொண்டு இயங்கும் கபடி அணி.

 தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்கள் யார்? எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள்? என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம்.

தமிழ் தலைவாஸ் கபடி அணியின் உரிமையாளர் சிறந்த தொழிலதிபர் மற்றும் பிரபல தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரின் கூட்டாண்மை ஆகும். இந்த அணி 2017-ல் துவக்கப்பட்ட ப்ரோ கபடி லீகில் (PKL) தமிழகத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது.

தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்:                 

நிம்மகட்ட பிரசாத்

Tamil-thalaivas-Kabaddi-team-owner

இவர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர்,மருத்துவத்துறையில் தொழில் அதிபராகவும், MAA TV உரிமையாளராகவும் உள்ளார்.
Kerala Blasters,  கால்பந்து அணியின் உரிமையாளராகவும், 
Bengaluru Blasters பேட்மிட்டன் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

துணை உரிமையாளர்கள்;
சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் வீரர்

அல்லு அர்ஜுன்,தெலுங்கு திரைப்பட நடிகர்

ராம்சரண்,தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்

அல்லு அரவிந்த்,இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர்.இவர் கேரளா பிளாஸ்டர்ஸ்(FC) அணியின் துணை உரிமையாளராகவும் உள்ளார்.


Who is the owner of Tamil thalaivas Kabaddi team

தமிழ் தலைவாஸ் அணியின் Home Ground  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் சென்னை,
Anthem:நம்ம மண்ணு! நம்ம விளையாட்டு!

தமிழ் தலைவாஸ் கேப்டனாக அஜய் தாக்கூர்
 தலைமை பயிற்சியாளராக உதயகுமார்.

தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதுவராக தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்ளார்.

புரோ கபடியில் ஒரு அணியை பதிவு செய்ய நுழைவு கட்டணமாக $250,000 செலுத்த வேண்டும். (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 1,77,50,000)

சீசன் 7 இன் சாம்பியன்கள் 3 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் 1.8 கோடி ரூபாயும் பெறும். தோல்வியுற்ற அரையிறுதி அணிக்கு தலா ₹ 90 லட்சம் பெறுவார்கள், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள அணிகள் ₹ 45 லட்சம் சம்பாதிக்கும்.

தமிழ் தலைவாஸ் அணியில் எவ்வாறு இடம் பிடிப்பது என்பது பற்றிய விரிவான கட்டுரை நம் இணையதளத்தில் உள்ளது படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 தமிழ் தலைவாஸ் அணியால் உரிமையாளருக்கு வருமானம் கிடைத்திருக்குமா என்றால், அது கேள்விக்குறிதான்?

TAGS: Tamil Thalaivas owner |Who owns Tamil Thalaivas Kabaddi team | Tamil Thalaivas team owner | Tamil Thalaivas Kabaddi |team ownership | Tamil Thalaivas franchise owner | Tamil Thalaivas Kabaddi team owner name |Tamil Thalaivas Kabaddi league owner | Tamil Thalaivas Pro Kabaddi owner 

Post a Comment

0 Comments