சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் 15/12/2019 அன்று மாவட்ட அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி சிறப்பாக நடைபெற்றது
இந்தப் போட்டியானது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான கடைசி போட்டி ஆகும்
(வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை என்று மூன்று மாவட்டங்கள்
சமீபத்தில் தான் துவக்க விழா கண்டது நினைவிருக்கலாம்)
காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டியானது இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றது,
போட்டியை வேலூர் மாவட்ட கபடி கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில நடுவர்கள் குழு கன்வீனருமான திரு.கோபாலன் அவர்கள் வழி நடத்தினார்,
போட்டியின் தலைமை நடுவராக மதுரையைச் சேர்ந்த திரு.குமரேசன்(PRO KABADDI OFFICIAL) அவர்கள் பணியாற்றினார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முழுவதும் இருந்து தலைசிறந்த 34 கபடி அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிப்போட்டி இரவு 2 மணிக்கு தொடங்கியது,கொட்டும் பனியிலும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் குடியாத்தத்தை சேர்ந்த ப்ளூ ஸ்டார் கபடி அணியும், பேரணாம்பட்டு சேர்ந்த ராஜன் கபடி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
வேலூர் மாவட்ட கபடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த, இந்த கபடி போட்டியின் கடைசி நிமிடத்தில் 23 க்கு 11 என்ற புள்ளி கணக்கில் ப்ளூ ஸ்டார் அணி வெற்றி பெற்று வேலூர் மாவட்டத்தில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற அணிக்கு, தங்கப்பதக்கம் வெற்றி கோப்பையும் ஊக்கத்தொகையும் விழா நடத்தினார்களால் வழங்கப்பட்டது.
இந்த போட்டி தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் கபடி வீரர்கள், வரும் தமிழ்நாடு அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் பங்கேற்பார்கள்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக கடைசி முறையாக பங்கேற்கும் இந்த கபடி அணி சாதித்து கோப்பையை வெல்லுமா? என்று ஒட்டுமொத்த வேலூர் மக்கள்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 Comments