kavalan sos app details in tamil | kavalan sos பயன்பாட்டு விவரங்கள்

kavalan sos செயலி பயன்பாட்டு விவரங்கள் தமிழில்

தமிழக காவல் துறையால் உருவாக்கபட்டு,தமிழக அரசால் வெளியிடபட்ட பெண்களுக்கான பாதுகாப்பு செயலி தான் காவலன் SOS APP

kavalan sos பயன்பாட்டு விவரங்கள்


பெண்கள் கபடி அணி "விளையாட்டு போட்டிகளுக்கு" தமிழகம் முழுவதும் பயணிக்கிறது,பெண்களின் பாதுகாப்பிற்கு அணியின் பயிற்சியாளரும்,மேலாளரும் உடன் செல்வார்கள்,இருந்தாலும் பெண்கள் கபடி அணியின் பாதுகாப்பில் சிறிய குறைபாடு இருந்துகொண்டே தான் இருந்தது.

அந்த குறையை போக்க மற்றும்மொரு காவலனாக வந்திருப்பது தான் காவலன் செயலி,

தற்போதைய நாகரீக உலகத்தில் அனைவரின் கையிலும் ஆண்ராய்டு போன் உள்ளது,அந்த போனில் காவலன் செயலியை நிறுவுவது மிக சுலபம்,

தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் காவலன் SOS செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும்

நாம் இருக்கும் இடத்தை காவல்துறை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது

kavalan sos app details in tamil

காவலன் செயலியை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்;

Google play storeயில் kavalan appயை பதிவிறக்கவும்,

kavalan sos app details in tamil
உங்களுடைய மொபைல் எண், பெயர்,மற்றொரு மொபைல் எண்ணை(Alternate)  பதிவு செய்த பிறகு Next பட்டனை சொடுக்கவும்,
அடுத்த திரையில் உங்கள் இருப்பிடத்திற்க்கான விவரங்கள் கேட்கும் விவரங்களை கொடுத்த பிறகு Next பட்டனை சொடுக்கவும்

நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு  Activation Code எஸ்எம்எஸ் வழியாக வரும், அந்த ஆக்டிவேஷன் கோடை பதிவு செய்து OKவை சொடுக்கினால் உங்களுடைய கணக்கு தயாராகிவிட்டது.

kavalan sos app details in tamil

பதிவு செய்வதற்கு மிகவும் எளியது இக்கட்டான நேரத்தில் மிகவும் பயனுள்ள செயலி,ஒவ்வொரு பெண்களின் போனிலும்  இருக்க வேண்டிய மிக முக்கியமான செயலி, இணையம் இல்லாத இடத்தில் செயல்பட கூடிய வகையில் வடிவமைத்தது தான் இதனுடைய சிறப்பம்சம்.

இணைய இணைப்பு இல்லாத (Data not available) இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை (Auto SMS Alert) மூலமாகச் செயல்படும். 


காவலன் ஆப் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல. அனைவரும் இதனை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம். ஆபத்தான நேரத்திலே இதை நீங்கள் அமுக்கினால் 20 வினாடிகளில் உங்கள் லொகேஷன் போலீசுக்கு தெரிந்து விடும், உங்கள் பிரண்ட் கேமரா, பேக் கேமரா, மூலம் நீங்கள் என்ன ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று போலீசார் அறிய முடியும். அவர்கள் உங்கள் உதவிக்கு உடனே வருவர். ஆனால் இந்த ஆப் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படும்.


இது போல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் www.gkkabaddi.com

 பதிவிறக்கம் செய்யும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,(kavalan app download link)👇👇👇

ஆண்ட்ராய்டு போன்
 ஐபோன்
காவலன் பயன்பாட்டு தகவல்:

Tags: Kavalan SOS – Apps on Google Play, What is Kavalan SOS app? Kavalan app reviews, Kavalan app download link, the importance of Kavalan app

Post a Comment

0 Comments