how to participate in pro kabaddi-புரோ கபடியில் எவ்வாறு பங்கேற்பது?

PRO கபடியில் பங்கேற்பது எப்படி?

வெற்றிகரமாக 7 சீசன்களில் முடிவில்,எட்டாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது PRO Kabaddi,முன்பு எப்போதும் பெறாத உச்சபட்ச புகழையும் பணத்தையும் பெறுகின்றனர் PRO KABADDIயில் விளையாடும் கபடி வீரர்கள்,

how-to-participate-in-pro-kabaddi

தற்போது கபடி விளையாடும் ஒவ்வொரு வீரரின் எதிர்பார்ப்பும் ஒரு முறையாவது புரோ கபடியில் பங்கேற்க வேண்டும் என்பதே,
ஆனால் அதற்கு உண்டான வழிமுறைகள் பெரும்பாலான வீரர்களுக்கு தெரிவதில்லை,

பல திறமைகள் இருந்தும் வீரர்கள் புரோ கபடி வரை செல்ல முடிவதில்லை அந்த குறைகளை போக்கி பல வழிகளில் ஆராய்ந்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

புரோ கபடியின் அசுர வளர்ச்சிக்கு பிறகு புரோ கபடியில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ! "அதற்கு கடுமையான உடற் பயிற்சியும் மனப் பயிற்சியும், தளராத மனமும் வேண்டும்"

புரோ கபடியில் இடம் கிடைக்க கபடி வீரர்கள் செய்ய வேண்டியது என்ன?என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்;


முதலில் கபடியை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தனது உயிராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கபடி விளையாடுவதற்கு தன்னுடைய உடல் ஒத்துழைக்கிதா என்று உள்ளூர் கபடி போட்டிகளில் விளையாடி உறுதி செய்துகொள்ளலாம்.

உடலும் எடையும் உயரமும் கபடிக்கு ஏற்றாற்போல் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள ஏதாவது ஒரு பதிவு பெற்று   Kabaddi Clubயில்  சேர வேண்டும்
(தமிழகத்தைப் பொருத்தவரை அமெச்சூர் கபடி கழகம்(TNAKFI) பதிவு பெற்ற அமைப்பாகும்-அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏதாவது ஒரு கபடி  கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெறலாம்)

நீங்கள் இருக்கும் மாவட்டங்களில் அமெச்சூர் கபடி கழகங்களால் நடத்தப்படும் மாவட்ட அளவிலான சப் -ஜூனியர்,ஜூனியர்,சீனியர் போன்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த இடம் தான் உங்கள் கபடி திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த சிறந்த இடம்,
அமெச்சூர் கபடி கழகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் தேர்வுக்குழு உங்கள் விளையாட்டை கண்காணிக்கும்.
உங்களிடம் விளையாட்டு "தனித்திறமை" இருக்கும் பட்சத்தில் இங்கிருந்து மாநில போட்டிருக்கு தேர்வாக ஒரு வாய்ப்பு இருக்கிறது.
கபடி கூட்டமைப்பால் கவனிக்கப்படும் ஒரு கிளப்பிற்காக கபடி விளையாடத் தொடங்குங்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த கிளப்புகளுக்கு சோதனை போட்டிகள் நடத்தப்படுகின்றன,  உங்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு இருந்தால், நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்.

மாநிலப் போட்டியில் இருந்து தேசிய போட்டிக்குத் தேர்வாகிவிட்டால் உங்களுக்கு  PRO KABADDIயின் கதவு திறந்து விட்டது என்றே அர்த்தம்.

தேசிய அளவில் AKFIயின் பல தேர்வாளர்கள் (Amartuer Kabbadi Federation of India) சிறந்த வீரர்களைத் தேடுகிறார்கள், அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து தேர்வுகள் மற்றும் பயிற்சிக்கு வரச் சொல்கிறார்கள்.

நமது முழு திறமையும் வெளிப்பட ஒரு சிறந்த கோச் தேவைப்படுகிறது, அந்த கோச்சை தேடி செல்வது நம் கையில்தான் உள்ளது 
அதனால் உங்களுக்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல கபடி கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெறுவது தான் முதல் படி!

தமிழ் தலைவாஸ் நிர்வாகிகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

குறிப்பு:பண நோக்கத்திற்காக மட்டுமே கபாடியைப் பின்பற்ற வேண்டாம். நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால் நீங்கள் விளையாட்டுகளில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கபடியை பயிற்றுவிக்கும் சிறந்த கிளப்புகள் பற்றி அடுத்த பதிவுகளில் தெரிவிக்கிறேன்.
 கபடியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

46th Tamilnadu Junior Championship Kabaddi Tournament Final Match👇🏻


TAG: How can I become a pro-Kabaddi player | How can someone join pro kabaddi teams | How do I join a Pro Kabaddi team | How do we select in kabaddi, pro kabaddi registration | Pro kabaddi selection

Post a Comment

0 Comments