Youtubeல் சிறந்த கபடி சேனல்களும் அவர்களுடைய வருமானமும்
நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் கபடி போட்டியையும்,நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் கபடி ரசிகரையும் பார்க்க வைத்த பெருமை Youtbe Channelகளையே சாரும்.
ஆனால் இன்னும் தரம் மேம்படுத்தபட்ட கபடி போட்டிகளை ஒளிபரப்பும்(Pro kabaddi போல)Youtube சேனல்களின் தேவை இருக்க தான் செய்கிறது.
தமிழகத்தின் கபடி போட்டிகளை ஒளிபரப்ப பல Youtube சேனல்கள் இருந்தாலும்,அதில் சில முக்கியமான சேனல்களின் சேவைகளையும் அதற்கு கிடைக்கும் வருமானத்தையும் இங்கு பார்ப்போம்.
Note: The figures given here apply up to the article's writing days and are an approximation.
1.TN SPORTS;
தமிழகத்தின் பல முன்னணி கபடி போட்டிகளை ஒளிபரப்பும் சேனல்,இதுவரை 355 வீடியோக்கள் பதிவேற்ற பட்டுள்ளன, Subscribers:112k,2 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
TN Sports youtube channel சேனலின் மாத வருமானம் $400 முதல் $500 டாலர் வரை இருக்கலாம்.
2.NON STOP KABADDI;
2017- முதல் கபடி போட்டிகளை ஒளிபரப்பி வரும் சேனல்,இதுவரை 433 வீடியோக்கள் பதிவேற்ற பட்டுள்ளன, Subscribers:69.1K,
ஒரு கோடியே 90 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
Non Stop Kabaddi youtube சேனலின் மாத வருமானம் $150 முதல் $200 டாலர் வரை இருக்கலாம்.
3.GK Sports Kabaddi Youtube;
2018- வடதமிழகத்தின் கபடி போட்டிகளை ஒளிபரப்பும் சேனல்,இதுவரை 413 வீடியோக்கள் பதிவேற்ற பட்டுள்ளன, Subscribers:61K,ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது,
gk kabaddi youtube சேனலின் மாத வருமானம் $100 முதல் $150 டாலர் வரை இருக்கலாம்.
4.SRM Kabaddi;
2019-முதல் கபடி போட்டிகளை ஒளிபரப்பி வரும் சேனல்,இதுவரை 170 வீடியோக்கள் பதிவேற்ற பட்டுள்ளன, Subscribers:16k, 25 லட்சத்து 50,000 பார்வையாளர்களை பெற்றுள்ளது.
SRM Kabaddi சேனலின் மாத வருமானம் $130 முதல் $180 டாலர் வரை இருக்கலாம்.
5.VINO MEDIA;
வளர்ந்து வரும் இளம் சேனல் 2019-முதல் கபடி போட்டிகளை ஒளிபரப்பி வரும் சேனல்,இதுவரை 215 வீடியோக்கள் பதிவேற்ற பட்டுள்ளன, Subscribers:15.4k,
32 லட்சத்து 50,000 பார்வையாளர்களை பெற்றுள்ளது.
vino media சேனலின் மாத வருமானம் $100 முதல் $140 டாலர் வரை இருக்கலாம்.
SAI SPORTS LIVE;
தமிழகத்தில் நடக்கும் கபடி போட்டிகளை நேரடியாக(LIVE) ஒளிபரப்பும் சேனல்,நேரடி ஒளிபரப்பின் போதே 'லைவ் ஸ்கோர் போர்டு'(LIVE SCORE) TIMER என்று Pro Kabaddi போல பல புதுமையான முயற்சிகளை செய்த சேனல்.
2019-முதல் கபடி போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது,
இதுவரை 952 வீடியோக்கள் பதிவேற்ற பட்டுள்ளன, Subscribers:11.3k,
10 லட்சத்து 65 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
sai sports liveல் போட்டிகளை ஒளிபரப்ப கபடி போட்டிகளை நடத்தும் விழா கமிட்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
sai youtube live சேனலின் மாத வருமானம் $30 முதல் $50 டாலர் வரை இருக்கலாம்.
இதுவரை நாம் பார்த்தது கபடி போட்டியின் வீடியோக்களை ஒளிபரப்பும் சேனல்கள்,இப்போது நாம் பார்க்க இருப்பது தமிழகத்தில் இருக்கும் முக்கிய கபடி கிளப்புகளில் ஒன்றான "அளத்தங்கரை கபடி" கிளப்யின் Official youtube channel பற்றியது,
Azhathankari Kabaddi Club Official;
கபடி பயிற்சியையும், கபடி நுணுக்கங்களையும் மிகவும் தெளிவாக சொல்லிக் கொடுக்கும் கபடி சேனல் இது,இதுவரை 118 வீடியோக்கள் பதிவேற்ற பட்டுள்ளன, Subscribers:62.3k, 40 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.Azhathankari Kabaddi Club Official சேனலின் மாத வருமானம் $120 முதல் $150 டாலர் வரை இருக்கலாம்.
source:Socialblade.com
நீங்களும் ஒரு கபடி சேனலை உருவாக்கி கபடியின் புகழை உலகம் முழுவதும் பரப்பலாம்.
அதற்கு தேவை கபடியின் மீது பற்றும், கொஞ்சம் கணினி அறிவும்.
2 Comments