31st Tamilnadu sub-junior championship kabaddi match-2019-girls kabaddi tournament

தமிழ்நாடு சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி

தமிழ்நாடு சப் ஜூனியர் கபடி போட்டி


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை விளையாட்டு மைதானத்தில் அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் மாநில அளவிலான 31 வது ஆண்டு 16வயதுக்கு உட்பட்ட சிறுமியர்களுக்கான சேம்பியன்ஷிப் கபடி போட்டி 15-16-17/11/2019  மூன்று நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்றது.

கபடி போட்டியின் தொடக்க விழா வெள்ளி மாலை 5 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது,இதில் தமிழகத்தை சேர்ந்த 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டன
தமிழ்நாடு சப் ஜூனியர் கபடி போட்டி
sub junior kabaddi team

கபடி போட்டியின் தொடக்க விழாவில் தமிழக அமெச்சூர் கபடி கழக செயலாளர் திரு.சபியுல்லா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இரண்டாம் நாள் கபடி போட்டியின் தொடக்க விழாவில்  தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் திரு.K.C. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு வீரர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்


தொடர்ந்து நடைப்பெற்ற போட்டியில் 32 மாவட்ட அணிகளில் நாமக்கல் மற்றும் ஈரோடு  மாவட்ட அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் 


இந்த போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை  அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களின் நேர்முக உதவியாளரும்  ஜோலார்பேட்டை நகர செயளாளர் s.p.சீனிவாசன்  அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் நாமக்கல் அணி ஈரோடு மாவட்ட அணியை 34:20 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று முதல் பரிசு தங்கபதக்கத்தை தட்டி சென்றனர்.
namakkal sdat kabaddi team
namakkal sdat kabaddi team

மேலும்  இரண்டாம் இடம் பிடித்த erode kabaddi team வெள்ளி பதக்கத்தையும் தருமபுரி மற்றும் கோவை மாவட்ட அணிகள் மூன்றாம் இடத்தை பிடித்து வென்கலபதக்கத்தை வென்றனர்.
erode kabaddi team
erode kabaddi team
இந்த சாம்பியன் போட்டியில் பங்கேற்ற 32 மாவட்டங்களிலிருந்து பங்கேற்று மிக சிறப்பாக விளையாடிய  12 வீராங்கனைகள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தேசிய போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தப்போட்டியில் ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட கபடி கழக இணைச் செயலாளர் திரு. மதன்குமார் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.


இந்தப் போட்டிகளில் வீடியோக்களை gk sports kabaddi youtube என்ற இணைய தளத்தில் நீங்கள் காணலாம்.





Post a Comment

0 Comments