46-வது தமிழ்நாடு ஜூனியர் சாம்பியன்ஷிப் பெண்கள்- ஆண்கள் கபடி போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், தமிழ்நாடு அமெச்சூர் அமெச்சூர் கபடி கழகமும், கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் பெண்கள் கபடி போட்டி
நாள்:29/11/2019 வெள்ளிக்கிழமை முதல் 1/12/2019 ஞாயிற்றுக்கிழமை வரை
இடம்:அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம்,போச்சம்பள்ளி
(போச்சம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மைதானம் அமைந்துள்ளது)
தமிழகம் முழுவதும் இருந்து 32 ஆண்கள் அணியும் , 32 பெண்கள் அணியும் பங்கேற்கும் மாபெரும் கபடி திருவிழா,29/11/19 மாலை கபடி வீரர்களின் அணிவகுப்புடன் போட்டிகள் துவங்கி தொடர்ந்து நடைபெறும்,
tamil-nadu-state-junior-championship-boys-kabaddi-match-schedule |
tamil-nadu-state-junior-championship-giris-kabaddi-match-schedule |
துவக்க விழாவில் தமிழக கபடி கழக தலைவர், செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழக செயலாளர், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் , கபடி கழக நிர்வாகிகள் என்று பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்
மைதானத்தை வந்தடையும் வழிகள் தரை மார்க்கமாக;
-----------------------------------------------------------------------------------------
தர்மபுரி பஸ் நிலையம் To போச்சம்பள்ளி =36 KM(தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர், வேலூர் ,சென்னை செல்லும் அனைத்து பஸ்களும் போச்சம்பள்ளி வழியாகத்தான் செல்லும்.
திருவண்ணாமலை-செங்கம்- ஊத்தங்கரை-போச்சம்பள்ளி = 86KM
( பெங்களூர் செல்லும் பேருந்துகளில் மத்தூர் பஸ் நிலையத்தில் இறங்கி, பேருந்து மாறி போச்சம்பள்ளி வந்தடைய வேண்டும்=8KM)
சேலம்- தர்மபுரி-போச்சம்பள்ளி=102KM
ரயில் மார்க்கமாக தர்மபுரி ரயில் நிலையத்தில் இறங்கி பஸ் மார்க்கமாக போச்சம்பள்ளி வந்தடையலாம்-34KM
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி பஸ் மார்க்கமாக போச்சம்பள்ளி வந்தடையலாம்-38KM
64 அணிகள் 32 ஆண்கள் அணி,32 பெண்கள் அணி
நான்கு ஆடுகளம்,பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க பிரம்மாண்டமான கேலரி,இரவை பகலாக்கும் மின் ஒளி அமைப்பு என்று பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது கிருஷ்ணகிரி அமெச்சூர் கபடி கழகம்.
இந்தப் போட்டியின் தொடர் அப்டேட்களை பெற நமது இணைய தளத்தை புக்மார்க் (B00K MARK)செய்து கொள்ளவும்.
சென்ற வருடம் தர்மபுரியில் நடந்த
46-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் பெண்கள் கபடிபோட்டியில் திண்டுக்கல் அணி திருப்பூர் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது நினைவு இருக்கலாம்.
0 Comments